புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சத்தீஸ்கர் மாநிலத்தில் பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மரப்படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பஸ்தர் மாவட்டத்தில், தொல்பொருள் ஆய்வாளர்கள் இருவர் ஆய்வு மேற்கொண்டபோது மூன்று அடி உயரமுள்ள மிகப்பெரிய பாறை
ஒன்றில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அது பாறை அல்ல என்பதும் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மரத்தின் படிமம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தபடிமத்தை கிராம மக்கள் துணி துவைப்பதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். மரப்படிமத்தின் தொண்மையை கணக்கிட கார்பன் ஆய்விற்கு உட்படுத்த அதன் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் சுர்குஜா பகுதியில் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான படிமங்கள், சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டன.

அதே போல், இந்த படிமமும் பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top