புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆந்திரா தலைநகர் ஐதராபாத்தில் நோர்வே பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐதராபாத்திற்கு சுற்றுலா வந்த நோர்வே நாட்டுப் பெண்ணொருவர், ஷீரடி செல்வதற்காக அங்கிருந்து தனியார் பேருந்தில் ஏறினார். அதே பேருந்தில் பயணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க ஐந்து பேர், குடிபோதையில் அந்தப் பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பேசி கிண்டல் செய்தனர்.

இதனை தட்டிக் கேட்ட சக பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்.

இந்தச் சூழலில் பேருந்தை நிஜாமபாத் மாவட்டம், டிச்பள்ளி பொலிஸ் நிலையத்திற்கு நேராக ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஜமாலுதீன்கான், நடந்த விவரங்களை பொலிசில் கூறியதையடுத்து ஐந்து பேரையும் பொலிசார் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top