பெண்கள் ஏதாவது ஒரு விசயத்தை செய்தாலோ, சொன்னாலோ அதில் ஒரு தீர்க்கதரிசனம் இருக்கும். இதை வைத்துதான் ‘பெண் புத்தி பின் புத்தி´ என்ற பழமொழியே வந்தது. பின்னால் வரக்கூடியதை
முன்னதாகவே கணித்து முடிவெடுத்து செய்வார்கள்.
அந்த அளவிற்கு திறமை படைத்தவர்கள். இதை நிரூபிக்கும் வகையில் இப்போது ஒரு ஆய்வு முடிவு வந்துள்ளது. ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறிதாக இருந்தாலும், அதற்கு திறன் அதிகமாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஸ்பெயினின் மேட்ரிட் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர்கள் மூளையை வைத்து புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு புலனறியும் தேர்வுகளை வைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் 18 முதல் 27 வயது கொண்ட 59 பெண்கள் மற்றும் 45 ஆண்கள் பங்கேற்றனர்.
தூண்டுதல் பகுத்தறிவு, எண் திறன், நிலைமையை வேகமாக மாற்றி விடக்கூடிய திறன் ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் சிறப்பாக விளங்கினர்.
பெண்களின் மூளை, சிக்கலான விஷயங்களிலும் மிக குறைந்த செல்களின் சக்தியை மட்டுமே பயன்படுத்தி தீர்வு காணும் திறன் படைத்துள்ளது. எனினும், புலம்சார்ந்த நுண்ணறிவில் ஆண்கள் சிறப்பாக விளங்கியது ஆய்வில் தெரியவந்தது.
ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை 8 சதவீதம் சிறியதாக இருந்தாலும் அவர்களின் மூளைக்கு திறன் அதிகமாக உள்ளது. இதனால்தான் ஆண்களை விட பெண்கள் திறமையானவர்களாக விளங்குகின்றனர் என்று தெரியவந்தது.
திறமைக்கும் மூளையின் அளவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்று இந்த ஆய்வு குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறிவியல் துறை பேராசிரியர் டிரிவோர் ராபின்ஸ் கூறியுள்ளார். இனிமேலாவது பெண்கள் புத்திசாலிகள் என்று ஆண்கள் சமுதாயம் ஒத்துக்கொள்வார்களா?
0 கருத்து:
கருத்துரையிடுக