புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆக்லாந்தை சேர்ந்த ஆல்வின் சிங் என்பரை காணவில்லை என்று பிப்ரவரி 22-ம்தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பரபரப்பான சாலையின் முக்கிய சந்திப்பில் அவரது கார் 5 நாட்களாக நின்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த கேமராவில் அவர் காரை நிறுத்தும் காட்சி பதிவாகி இருந்தது.

இதை வைத்து அந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் காருக்குள் பிணமாக இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, அவர் அமர்ந்திருந்த முன் சீட் சரிந்திருந்தது. அதில் அவர் உடல் ஒரு புறமாக சாய்ந்து இருந்தது. இதனால் காருக்குள் ஆள் இருப்பது தெரியாமல் போய்விட்டது. இவரது சாவில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top