அநுராதபுரத்தில் பெண்ணை லிப்டுக்குள் பாலியல் சேஷ்ட்டை புரிந்த நபர்
அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சென்ற பெண்ணொருவரை லிப்டுக்குள் வைத்து பாலியல் சேஷ்ட்டை புரிந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் தேடப்பட்டு வந்தநிலையில் நேற்றுமாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 24 வயதுடைய திருமணமான குறித்த பெண்ணை தள்ளுவண்டியில் வைத்து லிப்டுக்குள் அழைத்துச் சென்றபோதே குறித்த நபர் பாலியல் சேஷ்டை புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக