புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் இருந்து 180 கிலோ மீட்டர் தூரத்தில் மியாகி என்ற தீவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.


6.2 புள்ளிகள் ரிக்டர் அளவுகளில் பதிவான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் அலறியடித்து வீட்டைவிட்டு ஓடினார்கள். ஆனால் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. 13 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுபோன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதிக்குள்ளானனார்கள். எனவே அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து பாதுகாப்பான இடங்களில் விடிய விடிய தங்கியிருந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடீரென கடல் உள்வாங்கியது. எனவே சுனாமி தாக்கலாம் என்ற பீதியும் கிளம்பியது. ஆனால் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top