புதுடெல்லியில் வாழும் பிங்கி சவுத்ரி (29) என்ற 6 மாத கர்ப்பிணி பெண், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் கருச்சிதைவு ஏற்பட்டு, அதன் பின்னர் தற்போது கருத்தரித்த அவருக்கு சிகிச்சையின் போது பிரசவ வலியும் உண்டானது. கருத்தரித்த 23வது வாரத்திலேயே அவருக்கு 500 கிராம் எடையுள்ள பெண் குழந்தை பிறந்தது.
உடல் முழுவதும் ரத்த தேமல், உணவு ஒவ்வாமை, நுரையீரல் நோய்த் தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிக்புக்கு ஆளான அந்த குழந்தையை 12 வாரங்களாக ‘இன்குபேட்டர்’ கருவியில் வைத்து டாக்டர்கள் பராமரித்து வந்தனர்.
டாக்டர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையால் தற்போது அந்த குழந்தை எல்லா நோய்களின் தாக்கத்தில் இருந்தும் மீண்டுள்ளது. பிறந்த போது இருந்ததை விட எடையும் இரட்டிப்பாகி உள்ளது.
குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாகும் மூளை மற்றும் இதர உறுப்புகளின் பாதிப்பு ஏதுமின்றி சராசரி குழந்தையாக அது வளர்ந்து வருகிறது என டாக்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக