மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் மகளே தனது தந்தையையும் தாயையும் கொலை செய்துள்ளார். மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் தரம் 11 இல்
கல்வி கற்கும் மாணவியே இந்த கொடூர செயலை செய்துள்ளார். தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களின் உதவியோடு இக்கொலைகளை அரங்கேற்றியுள்ளார். பொலிஸார் குறித்த மாணவியையும் 3 மாணவர்களையும் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பருவ வயது காதலுக்கு கண் இல்லை என்பது இந்த விடயத்தில் உண்மை தான்..!!
கல்வி கற்கும் மாணவியே இந்த கொடூர செயலை செய்துள்ளார். தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களின் உதவியோடு இக்கொலைகளை அரங்கேற்றியுள்ளார். பொலிஸார் குறித்த மாணவியையும் 3 மாணவர்களையும் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பருவ வயது காதலுக்கு கண் இல்லை என்பது இந்த விடயத்தில் உண்மை தான்..!!
செங்கலடியில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக் கொலையானது மிகவும் அதிர்ச்சியான ஒரு நிலைமையை குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படுத்தியிருந்தது. இக் கொலை பற்றி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் கொலை செய்த நான்கு மாணவாகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இங்கு நான்கு மாணவர்களா இந்தக் கொலையைத் திட்டமிட்டு செய்தார்கள்? என்ற ஆச்சரியத்தையும் விட அந்த நால்வரில் ஒருவர் கொலைசெய்யப்பட்டவர்களின் சொந்தமகள் என்பது பேராச்சரியத்தை கொடுத்துள்ளது.
தன்னை இவ்வுலகில் பெற்றெடுத்த தாய்தந்தையரையே தனது காதலுக்காக குறிப்பிட்ட மாணவி தனது காதலன் மற்றும் காதலனின் நன்பர்களுடன் கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொலை செய்யப்பட்ட இருவரும் இரண்டு பிள்ளைகளும் மட்டக்களப்பிற்கு புதுவருடத்திற்காக உடுப்பு எடுக்கச் சென்ற போது மகளான டக்சனா தனது காதலனிடம் தாங்கள் உடுப்பு எடுக்கச் செல்வதாகவும் வீட்டுத் திறப்பு குறித்த இடத்தில் இருப்பதாகவும் அதனை எடுத்து சமையல் அறைக்குள் இருக்கும் கறிக்குள் நஞ்சு போடும் படியும் குறிப்பிட்டுள்ளார்.
வீடுதிரும்பியவுடன் மயக்கமருந்து போடப்பட்ட உணவினை பெற்றோர்கள் கசப்பினால் உண்ணாதுவிட்டுள்ளனர். இந்தவேளையில் தொலைபேசியில் தனது காதலனை தொடர்புகொண்ட டக்சனா, மயக்க மருந்து போடப்பட்ட உணவினை தனது பெற்றோர் சாப்பிடாத விடயத்தை தெரிவித்ததுடன், அவர்கள் நித்திரை செய்தபின்பு வந்து கொலை செய்யும்படியும் தெரிவித்திருக்கின்றார்.
உடனே அவர்களுடைய வீட்டிற்கு காதலனும், காதலனின் இரண்டு நன்பர்களும் கொலைசெய்வதற்கு வந்துள்ளனர். அப்போது டக்சனாவின் வீட்டிலுள்ள நாய் குலைத்திருக்கிறது. உடனே டக்சனா நாயைக் கட்டுப்படுத்தியதுடன், கதவைத் திற்து தனது காதலைனையும் அவனின் நன்பர்களையும் உள்ளே விட்டிருக்கின்றாள்.
உள்ளே சென்றவர்கள் பெற்றோரை கத்தியினால் வெட்டிக் கொலைசெய்துள்ளர். கொலை செய்யப்பயன்படுத்திய கத்தி மற்றும் தடிகளை டக்சனாவின் காதலனுடைய நன்பன் கித்துள் பகுதியில் கொண்டு சென்று மறைத்து வைத்துள்ளான்.
0 கருத்து:
கருத்துரையிடுக