வென்னப்புவ - பண்டிருப்பு பகுதியில் சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு 7.50 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
36 வயதுடைய தொன் ஜூட் நிரோஷன் ஹெட்டியாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் மனைவியுடன் இடம்பெற்ற பிரச்சினையை அடுத்து குறித்த நபர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சடலம் மாரவில ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக