புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரபுதேவா இன்று தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.


நடன இயக்குனராக திரையுலக வாழ்க்கையை தொடங்கிய பிரபுதேவா தற்போது நடிகராக மட்டுமல்லாது இயக்குனராகவும் வெற்றி பெற்றுள்ளார்.

அக்னி நட்சத்திரம் படத்தில் நடனக் கலைஞராக தோன்றிய இவர் வெற்றிவிழா படத்தில் நடன இயக்குனராக மாறி இதுவரை 100 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இரண்டுமுறை தேசியவிருதும் பெற்றுள்ளார்.

போக்கிரி படம் மூலம் இயக்குனராகவும் உருவெடுத்த இவர் இந்தியில் வான்டட், ரவுடி ரத்தோர் போன்ற வெற்றிப் படங்களையும் இயக்கி முன்னணி இயக்குனராகவும் மாறியுள்ளார்.

இவர் தற்போது தெலுங்கில் ராமய்யா வஸ்தா வைய்யா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து நேற்று முன்தினம் காளகஸ்தி கோவிலுக்குச் சென்று இப்படம் வெற்றி பெற வேண்டினார்.

இப்படம் வரும் யூன் மாதம் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top