பில்லியன் வருடங்களுக்கு முன்னர் செவ்வாய்க் கிரகம் இன்னொரு நீல நிற பூமியாகவே இருந்தது என்று சமீபத்தில் வானியலாளர்கள்
தெரிவித்துள்ளனர்.இன்று காணப்படும் செவ்வாயின் தோற்றம் தரை மேற்பரப்பில் கற்களின் குவியலாகவும் தூசு நிறைந்த பாலை வனமாகவும் காணப்படுகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் செவ்வாய்க்கிரகத்தில் சென்று இறங்கி ஆய்வு நடத்தும் கியூரியோசிட்டி விண்வண்டி மற்றும் Mars Reconnaissance Orbiter எனும் இரு செய்மதிகளும் நடத்திய ஆய்வுகளின் முடிவின் படியும் வானியலாளர்களின் கணிப்பின் படியும் செவ்வாய்க் கிரகம் பில்லியன் வருடங்களுக்கு முன்னர் முற்றிலும் மாறுபட்ட உயிர் வாழ்க்கைக்கு உதவக் கூடிய ஒரு கிரகமாகவே இருந்தது என உறுதிபடக் கூறியுள்ளனர்.
அதாவது அக்காலத்தில் இந்த சிவப்பு நிறக் கிரகம் நீர்த் தேக்கங்கள், கடல்கள் என்பவற்றைக் கொண்டிருந்ததுடன் அடர்த்தியான வளிமண்டலத்தையும் கொண்டு உயிர் வாழ்க்கைக்கு உதவியுள்ளது. தற்போது அங்கு காணப்படும் தண்ணீரும் உயிர் வாழ்க்கையும் அற்றுப் போய் விட்ட போதும் பில்லியன் வருடங்களுக்கு முன் அது இன்னொரு பூமியாகவே இருந்தது என்பதில் ஆட்சேபணை இல்லை என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மேலும் செவ்வாய்க்கிரகத்தின் அப்போதைய தோற்றம் எப்படியிருந்தது என கணிணியால் வடிவமைக்கப் பட்ட படங்களையும் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இன்றைய செவ்வாய்க் கிரகத்தின் தோற்றத்தையும் பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியைப் போலவே தென்பட்ட அதன் தோற்றம் ஆகிய இரு படங்களையுமே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும்.
0 கருத்து:
கருத்துரையிடுக