கனடா-எட்மண்ட்டனில் அமைந்துள்ள சஸ்கட்சவான்(Saskatchewan) ஆற்றில் கடந்த ஞாயிறன்று இரண்டு சிறுமிகள் மாட்டிக் கொண்டனர்.
சமாராவும்(9)(Samara), க்ரீம்செனும்(10) (Krymzen) ரண்டல் பார்க் பாலத்தினருகே பனியாக உறைந்திருந்த ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்தபொழுது திடீரென்று ஆற்றுநீருக்குள் மூழ்கத் தொடங்கினர்.
அந்நேரத்தில் அங்கு சுற்றுலாவுக்காக வந்திருந்த ஆதம் ஷா(Adam Shaw)(27) என்பரின் குடும்பத்தினர் சிறுமிகள் ஆற்றுநீரில் அவதிப்படுவதைக் கண்டனர்.
உடனே ஆதம் ஷா தனது நாயை அழைத்துக்கொண்டு ஆற்றில் குதித்துள்ளார். அவரது மனைவியும் அவசர உதவி கேட்டு 911 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆற்றில் குதித்த ஆதம் ஷா, க்ரீம்சென் என்ற சிறுமியை இழுத்துக் கரையில் விட்டுவிட்டார். ஆனால் சமாரா என்ற மற்றொரு சிறுமி மட்டும் ஆற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
நிலைமை மோசமாவதை உணர்ந்து ஆதம்ஷா பனியாற்றில் நாயுடன் விரைவாக நீந்திச்சென்றாலும் சமாராவுக்கு அருகே செல்லமுடியாமல் மீண்டும் மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளார்.
உடனே இவர் நாயின் சங்கிலியை எட்டி எறிந்தவுடன் சமாரா சங்கிலியை இறுகப் பிடித்துக் கொண்டார். நாய் கரையை நோக்கி நீந்தியது. சமாராவும் கரையை நோக்கி இழுத்துவரப்பட்டார். இருவரும் பாதுகாப்பாகக் கரையேறினர்.
இன்னும் இரண்டு நிமிடங்கள் தாமதித்திருந்தால் சமாரா இறந்திருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக