ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் ஆண் என்று ஒரு வர்கம் இருக்காது
அதிர்ச்சி ரிப்போர்ட் !
இன்றில் இருந்து சுமார் 5 மில்லியன் வருடங்களுக்கே உலகில் ஆண்கள் வாழ்வார்கள் என்றும், அதன் பின்னர் அவர்கள் முற்றாக அழிந்துவிடுவார்கள் என்றும் பிரபல அவுஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். அருகிவரும் வேறு பல மிருகங்களைப் போல மனித குலத்தில் ஆண்கள் அழிந்துவிடுவார்கள் என்றும் பெண்கள் மட்டுமே மிஞ்சியிருப்பார்கள் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. மனித குலத்தில் உள்ள ஆண்கள் என்ற வர்கம் அழிவினை நோக்கிச் செல்வதாகவும், அது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்றும் விஞ்ஞானி கிரேவ்ஸ் தெரிவித்துள்ளார். எதனை வைத்து நாம் ஒரு இனத்தை ஆண் , மற்றும் பெண் எனப் பிரிக்கிறோம் ? ஆண் இனமானது பெரும்பாலும் ஆதிக்க சக்திகொண்டதாக அமைந்திருக்கின்றது. 10 வயதில் இருக்கும் ஒரு சிறுவனுக்கும் 15 வயதில் இருக்கும் ஒரு ஆணுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால், அது செக்ஸ் ஹார்மோன்களாகத் தான் இருக்க முடியும் என்பார்கள். அதாவது ஒரு சிறுவன், அப் பருவத்தில் இருந்து டீன் ஏஜ் பருவத்தை அடையும் போது அவன் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்கள், அவனது குரலை மாற்றமடையச் செய்வது முதல், உடலை பலப்படுத்தும், தசை நார்களை அதிகரிக்கச்செய்து உடல் பருமனைக் கூட்டி, சக்தியைக் கொடுக்கும் வரை பல வேலைகளைச் செய்கிறது.
இந்த ஹார்மோன்களில் காணப்படும் Y எனப்படும் குரோமசோம்களே ஆண்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கிறது என்கிறார்கள். அது தற்போது ஆரம்பமாகிவிட்டது என்று சொல்லி ஆண்களில் வயிற்றில் புழியைக் கரைக்கிறார்கள். பெண்களின் செக்ஸ் ஹார்மோன்களில் காணப்படும் குரோமசோம்களில்(X) இல் சுமார் 1,000 நலமுள்ள(நல்ல) ஜீன்கள் காணப்படுகிறதாம். இவை அனைத்துமே நலமுள்ள ஜீன்கள் ஆகும். அது குமரியாக இருந்தாலும் சரி, இல்லை என்றால் வயது முதிர்ந்த பெண்ணாக இருந்தாலும் சரி. ஆணால் ஆண்களில் உள்ள Y குரோமசோம்களில் உள்ள அந்த 1000 ஜீன்கள், மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்து தற்போது சுமார் 100 ஜீன்கள் மட்டுமே காணப்படுகிறதாம். அதாவது 1 மில்லியன் வருடத்தில் இவை நிகழ்ந்துள்ளது என்று கணக்கிடப்படுகிறது. இப்படியான மாற்றம் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது என்றும், அதனை மனித இனம் கவனிக்க தவறிவிட்டதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனை விஞ்ஞான ரீதியாகவோ இல்லை மரபணு ரீதியாகவோ மனிதனால் மாற்ற முடியாது(சரிசெய்ய முடியாது) இதற்க்கு சிகிச்சை எதுவும் கிடையாது என்கிறார்கள்.
எனவே இன்றில் இருந்து சுமார் 5 மில்லியன் வருடங்களின் பின்னர், மனித குலத்தில் ஆண்கள் என்ற வர்கமே இருக்காது. அப்படி அவர்கள் இருந்தாலும் அவர்களால் பிள்ளைகளை உருவாக்க முடியாது. அப்படி என்றால் மனித குலமே அழிந்துவிடுமா என்று கேட்க்கிறீர்களா ? அப்படிச் சொல்லிவிட முடியாது. டைனசோர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பல மிருகங்கள், பின்னர் பரிணாம வளர்ச்சி கண்டு பறவைகளா மாறவில்லையா ? நீரில் மட்டுமே வாழக்கூடிய பல இனங்கள் பின்னர் தரையிலும் வாழக் கற்றுக்கொள்ளவில்லையா ? அப்படி மனித குலம் ஒரு புது பரிணாமத் தோற்றத்தை எடுக்கவிருக்கிறது என்பது தான் உண்மை நிலையாகும். உலகில் உள்ள சில நுண் உயிரிகள் பைசெஞ்சேரியல் அல்லது ஹேர்மத்தடைட் என்று சொல்லக்கூடிய இருபால் உயிரினங்களாக இருக்கிறது. அதாவது ஆண் மற்றும் பெண் இனம் ஒரே உயிராக இருக்கும். அதனால் இனப்பெருக்கம் செய்ய அவர்கள் வேறு துணையை நாடுவது இல்லை. தாமே இனப்பெருக்கம் செய்துகொள்ளும். பொதுவாக மண் புழு இனங்கள், சிலவகை மீன்கள், என்று உலகில் பல உயிரினங்கள் இவ்வாறு காணப்படுகிறது. தற்காலத்தில் ஆண் ஒருவர் பெண் போலக் காணப்படுவதையும், பெண் ஒருவர் ஆண் போலக் காணப்படுவதையும் பார்த்து பலர் அதனை ஏற்றுக்கொள்வது இல்லை. சில வேளைகளில் நகைப்பதும் உண்டு.
ஆனால் இன்னும் சில மில்லியன் ஆண்டுகளில் மனித குலத்தில் ஆண்கள் அழிக்கப்பட்டு, ஒரு பெண்ணே ஆணாகவும் ஒரு பெண்ணாகவும் இருக்கும் கதி நேரலாம். இதனை நோக்கியே மனித குலம் செல்கிறது என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். அப்போது காதல் இருக்குமா ? இல்லை வெறும் நட்புடன் தான் உலகம் இயங்குமா ? அவ்வாறான ஒரு காலகட்டத்தில் புத்தகங்களில் தான் காதல் கதைகள் இருக்கும். ஆண்களின் மற்றும் பெண்களின் உடலை, நாம் இப்போது டைனசோர்களின் எலும்புகளை பார்த்து வியப்பது போல அக்காலத்தில் பார்த்து வியப்பார்கள் அல்லவா ? இக் காலகட்டத்தில் நாம் வாழ்ந்தோம் என்ற பெருமை மட்டும் தான் எமக்கு மிஞ்சியிருக்கும் போல இருக்கே !
0 கருத்து:
கருத்துரையிடுக