புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டை சேர்ந்தவர் ரங்கசாமி 102; தொழிலதிபர். இவரது மனைவி ரங்கநாயகி,92. இருவரும் மிகுந்த பாசம் கொண்டிருந்தனர். எங்கு சென்றாலும், இருவரும் இணைந்தே செல்வது வழக்கம்.


இவர்களுக்கு, மூன்று மகள்கள், ஒரு மகன். ஒரு மகள், கோவையிலும், மற்றவர்கள் வெளியூர்களிலும் உள்ளனர். மகன், கனடாவில் உள்ளார். வசதி, செல்வாக்கு இருந்தும், இருவரும் தனி வீட்டில் வசித்து வந்தனர். பக்கத்து வீட்டு பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் மிகுந்த பிரியத்துடன் பழகி வந்தனர்.

இச்சூழலில், இரு வாரங்களுக்கு முன், ரங்கநாயகிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மனைவியை கூடவே இருந்து, கவனித்து வந்த முதியவர், ஒரு கட்டத்தில் மனமுடைந்தார்.

இந்நிலையில், மனைவி ரங்கநாயகியின் உடல்நிலை மேலும் மோசமானது. மனைவியின் நிலை கண்டு, ரங்கசாமி, கவலையுடன், சரியாக சாப்பிடாமல், குழம்பிய மனநிலையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை எழுந்து, வழக்கம்போல், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று, டீ குடித்து விட்டு வீடு திரும்பினார். சிறிது நேரம், மனைவியின் அருகில் அமர்ந்து, அவரையே பார்த்துக் கொண்டிருந்தவர், பின், தன் அறைக்குள் சென்று, வெகுநேரமாகியும் திரும்பவே இல்லை.

இந்நிலையில், அங்கு, அவரது மருமகன் ராஜேந்திரன் வந்துள்ளார். கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மாமியார் படுத்திருந்தார். அவருடன் பேசியபடியே, அறைக்குள் சென்ற மருமகன், மாமனார் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து, கோவை ரேஸ்கோர்ஸ் பொலிஸில், ராஜேந்திரன் புகார் செய்தார். பக்கத்து வீட்டாரிடம், பொலிஸார் நடத்திய விசாரணையில், "இருவரில் யார் முந்திக் கொண்டு இறப்போம்´ என, இருவரும் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது.

எங்கு சென்றாலும் பிரியாத, ஆத்மார்த்தமான தம்பதியரில், 102 வயது கணவர் மட்டும் தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தன்னை தனியாக விட்டு, பிரிந்து சென்று விட்ட கணவரை நினைத்து, ரங்கநாயகி கண்ணீர் வடித்தபடி படுத்திருக்கிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top