புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரிட்டனிலுள்ள டெர்பி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் தீயில் கருகி இறந்த வழக்கில் எட்டு வார நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் தந்தையே குற்றவாளி என்று தீர்ப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தந்தையான பில்போட்டு(Philpott) , சொத்துக்காக தனது இரண்டாம் மனைவி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தனது ஆறு குழந்தைகளை தூங்கும் அறைக்குள் வைத்து தீயிட்டு கொன்றார். பின்னர் அந்த பலியை தனது முதல் மனைவியான மிஸ் வில்லிசையின்(Miss Willis) மீது சுமத்த திட்டமிட்டார்.

ஆனால் தீவிர விசாரணைக்கு பின்னர் உண்மையான குற்றவாளிகளான இவர்கள் மூன்று பேரையும் பொலிசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

எட்டு வார காலமாக நடந்த இந்த விசாரணை முடிவில் தந்தையான ஃபில்போட்டுடன் அவரது இரண்டாம் மனைவி மெய்ரீட் ஃபில்போட(Mairead Philpott) மற்றும் அவர்களின் நண்பர் பால் மோஸ்லியும்(Paul Mosley) குற்றவாளிகள் என்று நாட்டிங் ஹாம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டெர்பிஷயர் பொலிசார் தாங்கள் இதுவரை இதுபோன்ற ஒரு வழக்கைச் சந்தித்ததில்லை என்று தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top