கள்ளக்காதலி தற்கொலை வழக்கில் கள்ளக்காதலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட் தீர்ப்பளித்தது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் பஷீர் அகமது (30). இவரது மனைவி ஷாகிரா பேகம் (25). வடபாதிமங்கலம் அடுத்த கோம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (40). பஷீர் அகமதுவும், ஆரோக்கியசாமியும் நண்பர்கள்.
பஷீர் அகமது கடந்த 2005ல் வெளிநாடு சென்று விட்டார். இந்நிலையில் ஆரோக்கியசாமிக்கும், ஷாகிராவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கூத்தாநல்லூரில் தனியாக வசித்தனர்.
ஆரோக்கியசாமியின் உறவினர்கள் கண்டித்ததால், ஷாகிராவை நாகை மாவட்டம் திருப்பூண்டியில் உள்ள அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்.
இதனால் மனமுடைந்த ஷாகிரா கடந்த 2005 ஜூன் 11ம் தேதி அன்று தீக்குளித்து இறந்தார். Ôஆரோக்கியசாமியால்தான் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக மரண வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த வழக்கு நாகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வநாதன், ஷாகிரா பேகத்தை தற்கொலைக்கு தூண்டிய ஆரோக்கியசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக