புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பள்ளியில் பிரிக்ஸ்டன்(Brixton) (14) என்ற சிறுமிக்கும் ஜேக்சன்(Jackson)(14) என்ற சிறுவனுக்கும் இடையே கால்பந்தாட்ட விளையாட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவருக்கும் இடையே ஜுனியர் கீவெல்(Nkwelle)(15) என்ற சிறுவன் தலையிட்டுப் பேசியுள்ளான். ஜுனியர் பேச்சு கேட்டு ஆத்திரமடைந்த அச்சிறுமி அவனிடம் உன்னை கத்தியால் குத்திக் கொல்ல ஆள் அனுப்புகிறேன் என்று சவால் விட்டு சென்று விட்டாள்.

அச்சிறுமி தனது காதலன் மார்க் துல்லோக்(Marc Tulloch)(17) என்பவனிடம் நடந்த தகராறைப் பற்றிக் கூறி ஜுனியரைக் கொன்று போட வேண்டும் என்று தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளாள். அவனும் அதற்கு ஒத்துக்கொண்டான்.

மார்க் அதன்படியே இப்பெண்ணிடம் மரியாதை இல்லாமல் பேசிய ஜுனியரைக் கத்தியால் குத்தினான். ஜேக்சனும் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளான்.

வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. விசாரணையில் இவர்களின் கொலை நோக்கம் தெளிவாகத் தெரிந்ததால் இருவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

துல்லோக்கின் சகோதரன்(15) கடந்த 2008ம் ஆண்டில் போரோவில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top