வயது வித்தியாசமில்லாமல், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் இணையம் மூலம் வீடியோ பார்க்க பயன்படுத்தும் தளம் யூடியூப்தான் (YouTube Video Website).
வகை வகையான வீடியோக்களை கொண்டுள்ள யூடியூப் தளத்தில் தினம்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் மேலேற்றப்படுகின்றன (YouTube). பார்வையாளர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கை தாண்டும்.
தற்கால விளம்பர யுகத்தில் விளம்பரமின்றி எந்த ஒரு பொருளும் விற்பதில்லை.. அதற்கு கூகிளின் யூடியூப் (Google YouTube) மட்டும் விதிவிலக்கா என்ன?
பல இலட்சக்கணக்கான இலவச வீடியோக்களை வழங்கும் யூடியூப் தளத்திலும் விளம்பரங்கள் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டன. பலராலும் பார்வையிடப்பட்டு, பல லட்சம் ஹிட்சுகளைப் பெற்ற வீடியோ என்றால் சொல்லவே வேண்டாம்.
வீடியோ ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விளம்பரங்கள் தோன்றிய பிறகுதான் நாம் விரும்பும் வீடியோவையும் பார்க்க முடியும்.
இது நம்முடைய பொறுமையை சோதிக்கும் விஷயமாகவும் சில நேரங்களில் மாறிவிடுகிறது. விளம்பரமே இல்லாமல் யூடியூப் தளத்தில் வீடியோ பார்க்க முடியாதா? என்ற ஏக்கத்தை உருவாக்கும் அளவிற்கு, சற்றேறக்குறைய அனைத்து விடீயோக்களிலும் விளம்பரங்கள் இடம்பெற்றுவிட்டன.
இத்தகைய ஏக்கத்திற்கு விடை கொடுக்கும் விதத்திலும், வீடியோக்களை விளம்பரமின்றி பார்க்கவும் உதவுகிறது கூகிள் குரோம் நீட்சி ஒன்று.
விளம்பரங்களின்றி YouTube Video க்களை பார்க்க உங்களிடம் இருக்க வேண்டியவை.
1. இணைய இணைப்பு (Internet Connection
2. கணினி, (computer)
3. கூகிள் குரோம் பிரௌசர். (Google Chrome Browser)
4. AdBlock for YouTube Extension
கீழ்க்கண்ட சுட்டியைக் கிளிக் செய்து உங்களுடைய கூகிள் குரோம் பிரௌசரில் இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.
AdBlock for YouTube Extension
இந்த சுட்டியைக் கிளிக் செய்தவுடன் அங்கு வலது மேல் மூளையில் Add to Chrome என்ற பட்டனை அழுத்துங்கள்.
இப்போது extension ஐ உங்கள் குரோம் உலவியில் சேர்க்கவா என உறுதிபடுத்தும் பெட்டித் தோன்றும்.
அதில் Add கொடுக்கவும்.
Add கொடுத்தவுடன் அந்த நீட்சி உங்கள் வலைஉலவியில் இணைந்துவிடும். இப்பொழுது உங்கள் வலை உலவியின் அட்ரஸ்பாரில் வலது பக்கத்தில் 'கை' போன்றதொரு சிறிய படம் தோன்றியிருக்கும்.
இனி, நீங்கள் YouTube தளத்தில் வீடியோக்களை காணும்பொழுது உங்கள் பிரௌசரில் உள்ள 'கை' போன்ற AdBlock for YouTube Extension ஐகானை அழுத்தினால் போதும்.
வீடியோ தொடங்கும் முன் தோன்றும் விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டு, நேரடியாக உங்களுக்கு வீடிய ஒளிப்பரப்பாகும். இடையிடையே வரும் விளம்பரங்களையும் இது தடுத்தி நிறுத்திவிடும்.
ஆக, நீங்கள் பார்க்கும் வீடியோவில் விளம்பர இடையூறுகள் இல்லாமல், தெளிவாக பார்க்க முடியும்.
0 கருத்து:
கருத்துரையிடுக