புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மும்பை புறநகர் பகுதியான தானேயில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 73 பேர் உயிரிழந்தனர்.



மும்பை புறநகர் பகுதியான தானேயில் புதிதாக கட்டப்பட்டு வந்த 7 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் மாலை திடீரென இடிந்து விழுந்தது.

இதில் அந்த அடுக்கு மாடியின் முதல் 4 மாடிகளில் வசித்து வந்த 35 குடும்பங்களை சேர்ந்தவர்களும், கட்டிடத் தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் பலியான நபர்களின் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இடிபாடுகளில் மீட்கப்பட்டவர்களில் ஒரு 10 மாத குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குழந்தையின் பெற்றோர் உயிருடன் தான் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே குழந்தையின் பெயர் தெரியாத காரணத்தினால் மருத்துவர்கள், குடியா என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top