எலிக் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அமிர்தலிங்கம் சுதாகரன் (33 வயது) என்பவரே நேற்று (07) மாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர்.கே.முருகானந்தம் தெரிவித்தார்.
கடுமையான காய்ச்சல் காரணமாக 5ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இவர் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைகளை மேற்கொண்ட வைத்தியர்கள் இவர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் இவரது சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக