கோ-படத்தில் நடித்த கார்த்திகா, அதையடுத்து, "அன்னக்கொடி படத்தில் டைட்டில் ரோலில் நடித்துள்ளார். ஆனாலும், அடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் கார்த்திகாவுக்கு
கிடைக்கவில்லை.
அதனால், தாய்மொழியான மலையாளத்துக்கு சென்று, "மகரமஞ்சு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பின், புதிய படங்கள் எதுவும், அவர் கைவசம் இருப்பதாக தெரியவில்லை.ஆனால், கார்த்திகாவோ, "அன்னக்கொடி படத்தைப் போலவே, இப்போது நடிக்கும்,"மகரமஞ்சுவும் பெரிய படம்.
அதனால் தான், இந்த படத்தை முடித்த பின், மற்ற படங்களில் கமிட்டாக உள்ளேன் என்று சொல்கிறார்.மேலும், "எனக்கு ஆறு மொழிகள் நன்றாக தெரியும். அதனால், ஓரிரு மொழியோடு முடங்கி கிடக்காமல், பரவலாக, இந்தியாவிலுள்ள அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து, தேசிய அளவில் சிறந்த நடிகையாக விளங்குவேன் என்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக