அமெரிக்காவில் விமானம் இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 22 வயது இளைஞர் தெளபோ பகுதியில் இருந்து நேபியர் நோக்கி பைபர் ரக சிறிய விமானத்தை இயக்கி கொண்டிருந்தார்.
அப்பொழுது வானிலை மாற்றம் காரணமாக விமானம் இயக்குவதில் பிரச்சனை ஏற்பட்டதால் அதை கடற்கரையில் தரை இறக்கியுள்ளார்.
இதில் அந்த விமானத்தில் சக்கரங்கள் மண்ணில் புதைந்து, விமானம் தலைகீழாக தூக்கி வீசப்பட்டது. ஆனாலும் விமானி தப்பிவிட்டார்.
விமானத்தின் கதவுகள் சிக்கிவிட்டதால், அதன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு அவர் பத்திரமாக வெளியேறியுள்ளார்.
இந்த விபத்தில் விமானமும் சேதமடையவில்லை, விமானியும் சிறிதும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக