நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் (29). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (24). இவர்களுடைய மகன்கள் லோகேஷ் (8), தமிழ்ச்செல்வன் (6). செல்வியின் நடத்தை மீது
சந்தேகப்பட்டு அய்யனார் அடிக்கடி கொடுமைப்படுத்தி உள்ளார்.
இதனால் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வரத்தாடுமேட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றார் செல்வி. அங்கு சென்ற அய்யனார் நேற்று காலை செல்வியுடன் தகராறு செய்தார்.
ஆத்திரம் அடைந்து திடீரென வீட்டில் இருந்த கொடுவாளால் மனைவியை தாக்கினார். சத்தம் கேட்டு ஓடி வந்த இரு குழந்தைகளையும் அவர் சரமாரியாக வெட்டினார்.
தலையில் வெட்டு விழுந்ததால் சிறுவன் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானான். செல்விக்கு தலை, வலது கை மணிக்கட்டு பகுதியில் வெட்டு விழுந்தது. மற்றொரு குழந்தை லோகேசுக்கு தலையிலும், வலது உள்ளங்கையிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
உடனே அய்யனார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பலத்த காயம் அடைந்த செல்வி, லோகேசை மருத்துவமனையில் சேர்த்தனர். வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யனாரை தேடினர்.
அப்போது, வண்ணாந்துறை என்ற இடத்தில் கரட்டு பாறை அருகே, அய்யனார் சடலமாக கிடப்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக