புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகரில் உள்ள வங்கியில், சென்ற வருடம் ஏப்ரல் மாதம், கணக்காளர் ஒருவர் பணியில் இருக்கும்போதே தூக்கத்தினால் கண் அசந்துள்ளார்.

அவர் உறங்கியபோது, பணி ஓய்வு பெற்ற ஒருவரின் கணக்கில் 62.40 யூரோக்களை வரவு வைக்க வேண்டி, கனணி கீபோர்டில் 2 என்ற எண்ணில் விரலை வைத்தவண்ணம் உறங்கிவிட்டார்.

இந்த சிறிய அசதியானது, தவறுதலாக 222,222,222.22 யூரோக்கள் என்று பதிவாகியுள்ளது. அவரின் மேலாளரும் அதனைக் கவனிக்காமல் கையெழுத்திட்டுள்ளார். இந்தத் தவறு மற்றொரு பணியாளரால் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. ஆயினும், மேலாளர் கவனகுறைவைக் குறை கூறிய வங்கி நிர்வாகம் அவரைப் பணி நீக்கம் செய்துள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட மேலாளர், 1986ஆம் வருடத்திலிருந்து அங்கு வேலை செய்துவந்துள்ளார்.

48 வயதான அவர் நீதிமன்றத்தில் இதுகுறித்து முறைப்பாடு செய்தார்.

குறித்த வழக்கின் விசாரணையின் போது, அன்று மட்டும் அந்தப் பெண் மேலாளர் 812 ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டியிருந்தது எனவும், நேரப் பற்றாக்குறையால் ஒரு வினாடிக்கு மேல் ஒரு ஆவணத்திற்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை என்பதுவும் தெரிந்தது.

ஹெஸ்ஸே நீதிமன்றம் அந்தப் பெண் மேலாளரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு தற்போது வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top