திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த துரைசாமிக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து ரகளை செய்வார். மனைவி மற்றும்
மகன்களை அடித்து உதைப்பார்
இவரது மனைவி குப்பாத்தாள்(40). இவர்களுக்கு மாசிலாமாணி(9). சஞ்சீவி(5) என்ற 2 மகன்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். "நமக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களை படிக்க வைக்க வேண்டும். தினமும் குடித்து விட்டு ரகளை செய்வதை விட்டு விட்டு திருந்தும் வழியைப் பாருங்கள்" என்று குப்பாத்ததாள் தனது கணவரை கண்டித்தார்.
ஆனால் துரைசாமி தனது குடிப்பழக்கத்தை கைவிடுவதாக இல்லை. இன்று காலை பள்ளிக்கூடம் செல்வதற்காக மாசிலா மணியும், சஞ்சீவியும் நேற்று இரவு தங்களது நோட்டு புத்தகங்களை பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது துரைசாமி குடிபோதையில் தள்ளாடியபடி அங்கு வந்து மனைவி மற்றும் மகன்களை வாய்க்கு வந்தபடி திட்டினார்.
பின்பு குளியல் அறையின் கதவுகளை உடைத்தெறிந்தார். திடீரென்று வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து குப்பாத்தாளை வெட்ட பாய்ந்தார். குப்பாத்தாள் அங்கிருந்த தப்பி ஓடி உயிர் பிழைத்தார். கணவன் தூங்கி விட்டார் என்ற தகவல் அறிந்ததும் குப்பாத்தாள் வீட்டுக்கு வந்தார்.
"நமக்கு இப்படி குடிகார கணவனாக அமைந்து விட்டானே" என்ற மனவேதனையில் அவரும் தூங்கச் சென்றார். இன்று அதிகாலை கண் விழித்த அவருக்கு தூங்கிக் கொண்டிருந்த துரைசாமியைப் பார்த்ததும் ஆத்திரம் வந்தது.
"இனிமேலும் இவனை விட்டு வைத்தால் நமக்குத்தான் கேடு. தீர்த்துக்கட்டி விட வேண்டியது தான்" என்று முடிவு செய்த குப்பாத்தாள் அங்கு கிடந்த அரிவாளை எடுத்து துரைசாமியை சரமாரியாக வெட்டினார். ஆத்திரம் தீர 20 இடங்களில் வெட்டினார். போதையில் கிடந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
துரைசாமி படுகொலை குறித்து அக்கம் பக்கத்தினர் தாராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி குப்பாத்தாளை கைது செய்தனர். துரைசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து துரைசாமியின் மகன்களிடம் போலீசார் விசாரித்த போது "எங்களது தந்தை அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்வார்.
வழக்கம் போல நேற்றும் குடித்து விட்டு வந்து எங்கள் தாயாரை வெட்டிக்கொல்ல முயன்றார். அந்த ஆத்திரத்தில் தான் எங்கள் தாய் இந்த கொலையை செய்தார் என்று மனதில் எந்த சலனமுமில்லாமல் கூறினார்கள்.
தூங்கிக் கொண்டிருந்த கணவனை மனைவியே வெட்டிக் கொன்ற சம்பவம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக