பழைய இரும்பு கொள்வனவு செய்ய வந்திருக்கிறோம் என்று கூறி வயோதிப பெண் ஒருவரை ஏமாற்றிவிட்டு ஆட்டுக் கொட்டிலில் கட்டியிருந்த ஆட்டுக் கடாவினை அவிழ்த்து வாகனத்தில் ஏற்றிய திருட்டுச் சம்பவம் ஒன்று
இன்று பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது
இன்று காலை 11மணியளவில் புலோப்பளை மேற்குப் பகுதியில் வியாபாரிகள் போல் தோற்றமளித்த மூவர் சிறிய ரக வாகனமொன்றில் வீடொன்றினுள் உட்புகுந்து பழைய இரும்பு கொள்வனவு செய்வதற்கு வந்ததாகக் கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவ்வீட்டில் இருந்த வயோதிபப் பெண்மணி இரும்புகளை எடுத்துவருவதாக வீட்டின் பின்பகுதிக்குச் சென்றுள்ளார்.
அவ் வேளையில் வியாபாரிகள் போலத் தோற்றமளித்த மூவரும் ஆட்டுக் கொட்டிலில் கட்டியிருந்த ஆட்டுக் கடாவினை அவிழ்த்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
ஆடு கத்திய சத்தம் கேட்டு வீட்டுப் பெண்மணி ஓடி வந்து வாகனத்தில் ஆடு ஏற்றப்பட்டிருப்பதைக் கண்டு அதனை மறித்த வேளையில் அவரைத் தாக்கிக் கீழே தள்ளி விட்டு அம் மூவரும் தப்பிச் சென்று விட்டனர்.
அதி வேகமாக வந்த அவர்கள் வழியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதித் தள்ளி விட்டுச் சென்றுள்ளனர்.
விடயத்தினைக் கேள்வியுற்ற பிரதேச வாசிகள் பளைப் பகுதியில் வைத்து அவ் வாகனத்தினை மறித்து நிறுத்திய போது மூவரில் இருவர் தப்பித்து ஓடி விட ஒருவர் பிரதேச வாசிகளிடம் மாட்டிக் கொண்டார்.
மாட்டிக்கொண்டவரைப் பிரதேச வாசிகள் விசாரித்த பொழுது அவர் தானும் தன்னுடன் வந்த இருவரும் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியைச் சேர்ந்த முஸ்லீம்கள் எனக் கூறியுள்ளார்.
மேற்படி நபர் பின்னர் அப்பகுதிப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
புலோப்பளைப் பகுதியில் கடந்த சில காலங்களாக ஆடுகள் தொடர்பான திருட்டுகள் அதிகரித்துக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் மிகவும் விசனமடைந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது.

0 கருத்து:
கருத்துரையிடுக