புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தியேட்டர் ஒன்றில் தனது மனைவியுடன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் கள்ளக் காதலனை அவளது கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று யாழ். நகரில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணின் கணவன் கூலித் தொழிலாளி. இவர் காலை கூலித் தொழிலுக்கு சென்றால் இரவில் தான் வீடு திரும்புவார்.

இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திய குறித்த பெண் தனது தொலைபேசிக் கள்ளக் காதலனுடன் சென்று குசியாக திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

இதனை குறித்த பெண்ணின் கணவனின் நண்பர் ஒருவர் தொலைபேசி மூலமாக அவருக்கு போட்டுக் கொடுக்க, வேலையில் நின்ற கணவன் திடீரென கத்தியுடன் தியேட்டருக்குள் புகுந்துள்ளார்.

இதனால் சற்று நேரம் தியேட்டர் போர்க்களமாக மாறியது.

குறித்த பெண்ணின் கள்ளக் காதலுக்கு கத்தி வெட்டு ஏற்பட்டுள்ளது.

உடனடியான அவர் அங்கு நின்ற ஆட்டோ ஒன்றில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குறித்த பெண் தனது முகத்தை துணியால் போர்த்தபடி நிற்க, அவளது கணவன் அவளை தலைமுடியில் பிடித்து தர தர என இழுத்துச் சென்று தான் வந்த ஆட்டோ ஒன்றில் கொண்டு சென்றுள்ளார்.

இச் சம்பவத்தினால் தியேட்டர் அரைமணி நேரம் தாமதமாக திரைப்படம் ஆரம்பமாகியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top