புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பில் 12 வயதுச் சிறுமியொருவரை
வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சிறுமியினுடைய தாயின் இரண்டாம் தாரமான சிறிய தந்தை முறையானவரே நேற்று திங்கட்கிழமை இரவு இச்சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியதாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க இந்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top