புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆஸ்திரியாவில் வங்கி ஊழியர் ஒருவர், அருகில் உள்ள மற்றொரு வங்கிக்கு கொண்டு சென்ற சுமார் 90,000 யூரோக்களை ஆற்றில் தவறவிட்ட சம்பவம் நடந்துள்ளது.


ஆஸ்திரியாவில் இயங்கும் ஒரு பிரபலமான வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், அருகில் உள்ள மற்றொரு வங்கிக்கு சுமார் 90,000 யூரோக்களை டெபாசிட் செய்வதற்காக கொண்டு சென்றார்.

வங்கிக்கு சென்றுக்கொண்டிருந்த வழியில், எதிர்பாராத விதமாக அவரது வாகனத்தின் சக்கரம் பஞ்சராகி விட்டது. கார் ஒரு ஆற்றங்கரை அருகே பஞ்சரானதால் அவர், காரை பழுது பார்ப்பதற்காக பண மூட்டைகளை கீழே இறக்கி வைத்தார். மலைப்பாங்கான இடமாக இருந்ததால், மூட்டைகள் சரிவில் உருண்டு ஆற்றில் விழுந்து விட்டது.

வேலையில் தீவிரமாக இருந்த ஊழியர் ஆற்றில் விழுந்த பண மூட்டைகளை கவனிக்காமல் இருந்ததால் பணத்தை மீட்கமுடியவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்த ஊழியர், அவர்களிடம் நடந்ததை விளக்கினார்.

ஆனால், தீவிர தேடுதலுக்குப் பின்னரும் குறைந்த அளவு பணத்தை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. மீதிப்பணம் முழுவதும் ஆற்றின் வேகத்தில் அடித்துச் சென்றுவிட்டது.

பணம் கிடைத்தால் உடனடியாக ஒப்படைக்கும் படி பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.வேலைநேரத்தில் கவனக்குறைவாக இருந்த வங்கி ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வங்கி ஊழியர் ஆற்றில் தொலைத்த பணம் ரூபாய் மதிப்பில் சுமார் 66 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top