இந்தியாவில் பீகார் மாநிலத்தில் வரதட்சணையாக எருமை மாடு தராத காரணத்தால் மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையை, அப்பெண்ணின் கணவரே தீயிட்டு கொளுத்தி கொன்ற கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம், நஷ்ரத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் உபேந்திரா மஹ்தோ, இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரினா தேவி (25) என்ற பெண்ணோடு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 14 மாத ஆண் குழந்தை இருந்தது.
திருமணம் முடிந்த நாளில் இருந்தே, வரதட்சணையாக தருவதாக கூறிய எருமை மாட்டை கேட்கும்படி மனைவியை கொடுமைப்படுத்திய உபேந்திரா, நேற்றும் ரினா தேவியிடம் சண்டை போட்டுள்ளார்.
கோபமடைந்த ரினா தேவி உபேந்திராவை எதிர்த்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உபேந்திரா, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை 14 மாத ஆண் குழந்தையை மடியில் வைத்திருந்த ரினா தேவி மீது ஊற்றி தீயிட்டு கொளுத்தினார்.
உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ரினா தேவி மற்றும் 14 மாத கைக்குழந்தை ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் உபேந்திராவை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தலைமறைவாக பதுங்கியிருக்கும் உபேந்திராவின் உறவினர்கள் மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்

0 கருத்து:
கருத்துரையிடுக