இளைஞர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி அவரது தந்த உயிரிழந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி, கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான முன்னாள் போராளியொருவரே இவ்வாறு தனது தந்தையை தாக்கி கொலை செய்துள்ளார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
புனர்வாழ்வை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய தனது மகனுக்கு அவரது தந்தை ஆலோசனை வழங்கியதால் கோபமடைந்த மகன், தேங்காய் துருவும் இயந்திரத்தால் தந்தையின் தலையில் பலமுறை பலமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
கிளிநொச்சி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக