புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இங்கிலாந்து நாட்டில் மகனுக்கு பேஸ்புக்கில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கார்ரி ஜான்சன் (46) தன்னுடைய மனைவியை 8 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்தவர். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள்.

விவாகரத்து பெற்ற அவரது மனைவி கேட்டுக்கொண்டதன் படி, கார்ரி ஜான்சன் தனது இரண்டு மகன்களையும் தன்னுடைய மகன்கள் தான் என எந்த நிலையிலும் வெளிபடுத்தக்கூடாது, அதாவது அவர்களுக்கு திருமணம் ஆகும் போதுகூட இவர் அவர்களுக்கு வாழ்த்து செய்தி போன்றவற்றை அனுப்பக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனை மீறி, அவர் தற்போது தன்னுடைய மகனுக்கு பேஸ்புக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து அறிவித்ததால், விதிமுறையை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்ற மாதக் கடைசியில் குடும்ப நீதிமன்றம் ஒன்றால் கைது செய்யப்பட்டு, நீதிபதி ஒருவரால் தீர்ப்பு சொல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜான்சனைக் காவல்துறையினர் முறையாகக் கைது செய்யவில்லை.

மேலும், அவர் சார்பாக வாதிட எந்த வழக்கறிஞரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top