புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

செல்போனில் பேச மறுத்ததால் கள்ளக்காதலியை சரமாரியாக வெட்டிய 60 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



திருமுல்லைவாயல் சீனிவாசா நகர் ராகவன் தெருவை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி (45). இவரது கணவர் செல்வம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு குழந்தை கிடையாது.

இந்நிலையில், சாமுண்டீஸ்வரிக்கும், திருமுல்லைவாயல் சோழம்பேடு ரோட்டை சேர்ந்த நடராஜன் (60) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 4 மாதங்களாக நடராஜனுடன் ஏற்பட்ட தொடர்பை சாமுண்டீஸ்வரி குறைத்து வந்துள்ளார். நடராஜன் போன் செய்யும்போதும் அவர் எடுப்பதை தவிர்த்தார்.

நேற்று காலை சாமுண்டீஸ்வரி தனது தங்கை மகன் சிவபிரகாசத்துடன் விறகு பொறுக்க வீட்டில் இருந்து புறப்பட்டார். சிறிது தூரம் சென்றதும் எதிரே வந்த நடராஜன், ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய். போன் செய்தாலும் எடுப்பதில்லை என கேட்டு சாமுண்டீஸ்வரியுடன் தகராறு செய்துள்ளார். உடனே நடராஜனை அவர் திட்டியுள்ளார்.

வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சாமுண்டீஸ்வரியை சரமாரியாக வெட்டினார். இதை பார்த்து பொதுமக்கள் ஓடி வந்தனர். உடனே நடராஜன் அங்கிருந்து தப்பிவிட்டார்.

தலை, கைகளில் வெட்டுப்பட்டு படுகாயமடைந்த சாமுண்டீஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருமுல்லைவாயில் காவல்துறையிர் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top