புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவியை தொடர்ந்து படிக்க குடும்பத்தினர் அனுமதிக்காததால் மனமுடைந்தவர் தற்கொலை செய்துகொண்டார்.


திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே, ஆர்.பி.பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவி, 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.

இவருக்கு, அதே ஊரைச் சேர்ந்த தேவராஜுடன், சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. தேர்வில், வெற்றி பெற்ற அவர் தொடர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்தார்.

அதற்கு தந்தை மற்றும் குடும்பத்தினர், எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். மாணவிக்கு, 18 வயதும் ஆகவில்லை. அதிருப்தியடைந்த மாணவி நேற்று முன்தினம், தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

பொலிஸாருக்கு தெரிவிக்காமல் உடலை குடும்பத்தினர் எரித்துவிட்டனர்.

இதுகுறித்து, ஆர்.புதுக்கோட்டை வி.ஏ.ஓ., தவமணி, எரியோடு பொலிஸில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரிக்கின்றனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top