10 மாத ஆண் குழந்தையொன்றை இனந்தெரியாத நபர் ஒருவர் கிணற்றில் வீசி கொலைசெய்த சம்பவமென்று நேற்றுப்பகல் மட்டக்களப்பு மயிலம்பாவெளிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆனந்தன் அனுஷன் என்ற பச்சிளங் குழந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் தொட்டிலில் குழந்தையை உறங்கச் செய்து விட்டு தாய் சமையலறையில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த வேளை குழந்தை அழும் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த போது நீளக்காற் சட்டை அணிந்த ஒருவர் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடிச் செல்வதை அவதானித்ததாக தாய் தெரிவித்துள்ளார்.
பின்னர் அயலவர்களை அழைத்துக் கொண்டு தேடிய போது குழந்தையின் சடலம் அயல் வீட்டுக் கிணற்றில் காணப்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக