புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜோ டோரி என்ற பிரபல அமெரிக்க பேஸ்பால் வீரரின் மகள் கிறிஸ்டினா டோரி (44). இவர் புரூக்ளினில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகில் உள்ள சாலையில் நடந்து கொண்டிருந்தார்.



அப்போது பக்கத்தில் இருந்த கடை ஒன்றின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் அருகே கீழே விழும் நிலையில் இருந்த ஒரு குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதற்காக தனது செல்போனில் முயற்சி செய்தார். அதற்குள் அந்தக் குழந்தை ஜன்னல் வழியே கீழே விழுந்தது.

சற்றும் தாமதிக்காமல், குழந்தை விழக்கூடிய இடத்தை அனுமானித்து சாமர்த்தியமாக அந்த குழந்தையை பிடித்து காப்பாற்றினார்.

ஒரு வயதே ஆன அந்த குழந்தையின் பெயர் டிலன் மில்லர். அவசர வழிக்காக ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த மரத்தடுப்பை அகற்றியதால் கீழே விழுந்தது என விசாரணையில் தெரிய வந்தது.

குழந்தை விழப்போகும் இடத்தை சில வினாடிகளில் யூகித்து அதனைக் காப்பாற்றியதற்கு பலரும் நன்றி சொன்ன போதிலும், தான் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளிவரவில்லை என்று கிறிஸ்டினா கூறினார்.

டிலனின் பெற்றோர்கள் அந்த சமயத்தில் நன்கு தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். அவர்களது பொறுப்பற்ற கவனிப்பின்மையினால் தான் டிலன் விழுந்ததாகக் கூறி, அவர்களைக் போலீசார் தண்டித்துள்ளனர்.

அவர்களின் மற்ற மூன்று குழந்தைகளும் (வயது 2,3,5) குழந்தைகள் சேவை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிறிய காயங்களுக்காக டிலனுக்கு, லூதரன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top