புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 30 வயது நபரொருவர் வெட்கமும் அச்சமுமடைந்து கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.


சந்தேக நபர் தமது புதல்வியை பாலியல் துஷ்பிரயோத்துக்குட்படுத்துவதைப் பார்த்த தாயார் இது குறித்து கடந்த 17ஆம் திகதி அரனாயக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனால் அச்சமும் வெட்கமுமடைந்த அந்த நபர் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

சந்தேக நபர் தம்மை துஷ்பிரயோகத்துக்குட் படுத்தவில்லை என்று மாணவி தெரிவித்த போதும் அவரை கேகாலை ஆதார வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்குட் படுத்திய போது அவர் துஷ்பிரயோகத்துக் குட்படுத்தப் பட்டது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

நீதிமன்றில் ஆஜர் செய்து சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க அரனாயக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top