அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி பகுதியை சேர்ந்தவர் டேவிட் காண்ட்லர். கடந்த 2010-ம் ஆண்டில் காரில் சென்று கொண்டிருந்த இவரை ரிகார்டோ வுட்ஸ் (28) என்பவன் துப்பாக்கியால் சுட்டான். அதில் காண்ட்லரின் தலை மற்றும் கழுத்து பகுதியில் குண்டுகள் பாய்ந்தது.
இதனால் படுகாயம் அடைந்த அவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் 2 வாரம் கழித்து காண்ட்லர் இறந்தார்.
சுடப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த காண்ட்லரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, கொலையாளி வுட்ஸ்சின் போட்டோவை காட்டி, ‘இவரா உங்கள் உங்களை துப்பாக்கியால் சுட்டார்’ என போலீசார் கேட்டனர். அதற்கு அவர் 3 முறை தனது கண்னை சிமிட்டி ‘ஆமாம்’ என சைகை செய்தார். அதை போலீசார் வீடியோ படம் எடுத்தனர்.
இந்த வழக்கு சின்சினாட்டி கோர்ட்டில் நடந்தது. அப்போது, நடந்த வாதத்தின்போது கொலை செய்யப்பட்ட காண்ட்லரின் கண்சிமிட்டல் சாட்சியம் வீடியோ மூலம் நீதிபதியிடம் போட்டு காட்டப்பட்டது.
அந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி குற்றவாளி ரிகார்டோ வுட்சுக்கு 36 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
வினோத சாட்சியத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த தீர்ப்பு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை மருந்து கடத்தல் தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக