தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்ததாக் கூறப்படும் உடதும்புர பகுதியைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவியின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பகிரங்க தீர்ப்பின் பிரகாரம் மாணவியின் சடலம் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி வீட்டில் வைத்து இந்த மாணவி தனது உடலுக்கு தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்ததாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த மரணம் தொடர்பில் சாட்சியாளர்கள் வழங்கிய வாக்குமூலங்களைக் கருத்திற் கொண்ட நீதவான் பகிரங்க தீர்ப்பு வழங்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து உடதும்பர பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மேலதிக விசாரணையின் பொருட்டு கொழும்பு சட்டவைத்திய நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக