புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட சட்டவிரேத போதை யூட்டும் புகையிலை பண்டல்களை யாழ்.வேலணை கிழக்குப் பகுதியில் உள்ள தனது வீட்டில் பதுக்கி வைத்து யாழ். இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்த பிரதான சந்தேக நபர் வேலணையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை மதுவரித் திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு என். கிருபாகரன் தலமையிலான குழுவினர் சந்தேக நபரின்  வீட்டில் சோதணையிடும் போது 288 கிலோக்கிராம் கொண்ட சட்டவிரேத போதையூட்டும் புகையிலைகளை வீட்டில் பதுக்கி வைத்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சந்தேக நபர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் நேற்று திங்கள் கிழமை காலை ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் அவருக்கு ஜந்து லட்சம் ரூபா காசு மன்றிக்கு கட்டும்படியும் தவறின்; 2வருட சிறைத்தண்டணை அனுபவிக்க  நேரிடும் என தனது தீர்ப்பில் ஊர்காவற்துறை நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top