புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


thumbnailஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் காலாவதியான 6 தொன் எடையுள்ள UARS எனும் செய்மதி இன்று பூமியில் விழுந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. எனினும் இந்த இடத்தில் விழுந்தது என உறுதியாகத் தெரியவில்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கிழக்குப் பிராந்திய நேரப்படி வெள்ளி இரவு 11.45 இற்கும் சனிக்கிழமை அதிகாலை 12.45 மணிக்கும் இடையில் (இலங்கை நேரப்படி சனி காலை 9.15 இற்கும் 10.15 மணிக்கும் இடையில் ) இச்செய்மதி பூமியில் விழும் என நாசா எதிர்வு கூறியிருந்தது.

சராசரி பஸ் அளவிலான இச்செய்மதி, 35 அடி நீளமானதாகும். இச்செய்மதியின் தலா 500 கிலோகிராம் எடையுள்ள சுமார் 26 பாகங்கள் பூமியில் விழும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் நாசா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அச்செய்மதி பூமியில்விழுந்து விட்டபோதிலும் சரியான இடத்தை அறிவதற்காக காத்திருப்பதாக நாசா இன்று தெரிவித்துள்ளது.

1979 ஆம் ஆண்டில், 75 தொன் எடையுள்ள ஸ்கைலாப் விண்வெளி நிலையமும் பேகஸஸ்-2 எனும் செய்மதியும் பூமியில் விழுந்தபின் விண்வெளியிலிருந்து கட்டுப்பாடின்றி பூமியில் விழும் மிகப்பெரிய பொருள் UARS செய்மதியாகும்.

2001 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் பூமியில் விழுந்தது. எனினும் கட்டுப்பாட்டுடன் இறக்கப்பட்ட அந்நிலையம் பசுபிக் சமுத்திரத்தில் விழுத்தப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top