புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வேலை கிடைக்காததால் விரக்தியடைந்து 100 சொகுசு கார்களை கொளுத்திய ஜேர்மனி வாலிபர் கைது செய்யப்பட்டார். ஜேர்மனியில் கார்கள் மர்மமான முறையில் எரிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. தலைநகர் பெர்லின் உள்ளிட்ட பல பகுதிகளில்.
கடந்த 10 மாதங்களில் 625 கார்கள் எரிக்கப்பட்டுள்ளன.  luxury, Audi, BMW, Mercedes போன்ற சொகுசு கார்கள் அதிகளவில் எரிக்கப்பட்டன. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இச்சம்பவங்கள் அதிகம் நடந்தன.

ஒரே நபர் இவ்வாறு செய்வதாக சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் தலைநகர் பெர்லினில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிய வாலிபரை(27) பொலிசார் பிடித்து விசாரித்தனர். சொகுசு கார்களை எரித்தது அவர் தான் என்று தெரியவந்தது.

அவர் கொளுத்தியதில் 67 கார்கள் முழுவதுமாக எரிந்துவிட்டன. 35 கார்கள் நாசமாயின என்றும் தெரிந்தது. வேலை இல்லாத விரக்தியில் இவ்வாறு செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top