புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அமையும் அரிதான தேதி 11-11-11 இந்த ஆண்டு வாய்த்திருக்கிறது.இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாளில் படங்களை வெளியிடுவதை பெருமையாக நினைத்து ஹாலிவுட்டில் படங்கள் தயாராகி வருகின்றன. அதுவும் சினிமா ரிலீசுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை இந்த தேதி
வருவது இன்னும் விசேஷமாகிவிட்டது.
நம்மவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா… தியேட்டர் கிடைக்காததால் தீபாவளியன்று வெளியிட முடியாத சோகத்தை இந்த சிறப்பு நாளில் வெளியிட்டு தீர்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி, தீபாவளிக்கு வெளியாகவிருந்து சிம்புவின் ஒஸ்தியும், தனுஷின் மயக்கம் என்ன படமும் இந்த 11-11-11 தினத்தில் வெளியாகின்றன. இரு நாயகர்களுமே இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
11-11-11 குறித்து தெரிந்து கொண்ட பிறகு வேறு சிலரும்கூட தங்கள் படங்களை அந்த நாளில் வெளியிடலாமா என யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் ரிலீசான நாளை மறக்க முடியாது பாருங்கள்!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top