புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாவலர் பாடசாலை அதிபர் ஒருவரால் தாக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

கடந்த 04ம் திகதி இச்சம்பவம் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. தாக்கப்பட்ட ஆசிரியை இசை ஆசிரியையாவார்.சம்பவ தினத்தன்று இரண்டு ஆசிரியர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போதே மேற்படி ஆசிரியை மீது அதிபரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு ஆசிரியர்களுக்கிடையில் வாய்தர்க்கம் இடம்பெற்ற போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த பாடசாலையின் அதிபர் மேற்குறித்த ஆசிரியையின் செவிப்பறையின் பக்கமாக ஒரு கன்னத்தில் பலமாக  தாக்கியுள்ளார்.

இதன் போது அதிபரின் தாக்குதலால் ஆசிரியை நிலை குலைந்து நிலத்தில் விழுந்தாக  தெரியவருகின்றது. இதனைத் தொடர்ந்து அதிபரின் மிரட்டில் காரணமாக ஆசிரியர் இவ்விடயத்தை பெரிதுபடுத்தாது விட்டுவிட்டார்.

ஆயினும் பின்னர் காதுப்பகுதியில் ஏற்ப்பட்ட வலி காரணமாக ஆசியர் கடந்த 07ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

சிகிச்சைக்காக சென்ற ஆசிரியையை உடனடியாக வைத்தியசாலையில் மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காக வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதன் படிநேற்று முன்தினம் மதியம் வரையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் குறித்த ஆசிரியை தங்கியிருந்து சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

ஆயினும் நேற்று மதியம் சிகிச்சைகளின் பின்னர் ஆசிரியை தனது வீட்டிற்கு அனுப்பி வைப்பட்டுள்ளார். அத்தோடு இதற்கு முதலும் ஒரு முறை அதிபர் மேற்படி ஆசிரியரை கல்லால் தாக்கியதாக தெரியவருகின்றது.

அத்தோடு மேற்படி ஆசிரியை வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவனின் நெருங்கிய உறவினராவார் என்பதும் குறிப்பிடத்தக்து.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top