
ஆனால் யாழ்ப்பாணத்து இளைஞர், யுவதிகள் அரசாங்கம் கொண்டு வரும் தீர்மானங்களை
நடைமுறைப்படுத்திக் காட்டி அதிலும் வெற்றியும் கண்டுள்ளனர்.
அந்த வகையில் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவனால் பெண்ணொருவர் கர்ப்பவதியாகியுள்ளார்.
இச் சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வாபுரம் பகுதியில் 17 வயதுப் பெண் ஒருவர் 16 வயதுப் பாடசாலை மாணவன் ஒருவனால் கர்ப்பம் தரித்துள்ளார்.
8 மாதக் கர்ப்பிணியாகவுள்ள பெண்ணை அவரது சகோதரி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று தங்கையின் கர்ப்பம் தொடர்பில் தெரியாததுபோல், அவரின் வயிறு மற்றும் உடம்பு பெருத்து வருவதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.
அதன் பின் வைத்தியசாலையின் வைத்தியரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் பின்னர் உண்மை தெரியவரவே அவர் கர்ப்பிணி என மகப்பேற்றுப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வக்கீலுக்கும் வைத்தியருக்கும் பொய் சொல்லக் கூடாது என்று இந்தச் சகோதரிக்குத் தெரியாமல் போனது கவலைதான்.
இருந்தும் கர்ப்பத்திற்குக் காரணமானவர் யார் என வைத்தியசாலை வட்டாரங்கள் விசாரணை செய்தபோதும் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளாத கர்ப்பவதி, தமது உறவினர்களிடம் அதனை விளக்கிக் கூறியுள்ளார்.
அதில், 16 வயதுப் பாடசாலை மாணவன் என்பதும் இவ்விருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
16, 17 வயதுப் பெற்றோருக்கு 8 மாதக் கரு காத்திருக்கிறது கருவறையில்.
0 கருத்து:
கருத்துரையிடுக