புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்வுள்ளார். இந்த மூதாட்டியின் திருமணத்திற்கு அவரது பிள்ளைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்த போதும் அவர் அதனை கருத்திற் கொள்ளாது இந்த முடிவை எடுத்துள்ளார். இவரது துணைவராகப் போபவர் ஒரு சமூக சேவையாளர் ஆவார்.


இவரது முதலாவது திருமணம் மிகவும் ஆடம்பரமாக இடம்பெற்றிருந்தது. இங்கிலாந்து இளவரசி எலிசபெத்தின் திருமணம் இவரது திருமணத்திற்கு ஒரு மாதம் தாமதாக இருந்ததால் அதனை இது மழுங்கடித்துவிடுமோ என்ற அளவிற்கு இச்சீமாட்டியின் திருமணம் இடம்பெற்றிருந்தது. இந்த 3ஆவது திருமணம் அவ்வளவிற்கு இல்லை என்றாலும் ஐரோப்பாவில் இடம்பெறப்போகும் மிகவும் பிரபல்யமான ஒன்றாக இருக்கப்போகின்றது.

இச்சீமாட்டி தனித்துவமான நாகரீகத்திற்காகப் பேர்போனவராகவும் 3 பில்லியன் சொத்துக்களை வைத்திருப்பவருமாக இருக்கின்றார்.

தனது 6 பிள்ளைகளதும் வாரிசுரீதியான பிரச்சினைகள் எழலாம் என்ற அவர்களது மறுப்புக்களையும் ஸ்பெயின் அரசரின் மறுப்பையுங்கூடச் சமாளித்து இவர் இந்த திருமணத்தை செய்கின்றார்.

இவர் சேர்ச்சில் மற்றும் அரசர் ஜேம்ஸ் II என்பவர்களின் வம்சாவளியினராவார். 16ஆம் நூற்றாண்டு மாளிகையும் இவரது வாசஸ்தலமாக இருந்த மாளிகையில் தான் புதன்கிழமை 1 மணியளவில் இத்திருமணம் இடம்பெறவுள்ளது.
இங்குதான் இவர் முந்தைய 2 கணவர்களுடனும் தனது பிள்ளைகளுடனும் வாழ்ந்திருந்தார்.

முதல் திருமணத்திற்கு மட்டுமே மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர்களான ஸ்பெயினின் அரச மற்றும் அரசி வருகை தருவதால் இத்திருமணத்திற்கு அவர்கள் சமூகமளிக்கமாட்டார்கள்.

சீமாட்டி மட்றிட் மாளிகையில் கடந்த வாரம் திரு.டியஸ் அவர்களை அறிமுகப்படுத்தியிருந்தார். இதுவொரு ஸ்பெயின் அரசகுலத்தினரின் சம்பிரதாயமாகும்.

ஸ்பெயினின் சீமாட்டி எலிசபெத் மகாராணிக்கும் தூரத்து உறவினராவார். இவரது திருமணத்தின் போது சம்பிரதாயப்படி போப்பின் முன்னிலையில் இவர் மண்டியிடத் தேவையில்லை.




0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top