
எங்கு பார்த்தாலும் கள்ளக்காதல் பெருகி வருகிறது. இந்த கள்ளக்காதல் உறவுகள் பல உயிர்கள் அநியாயமாக பலியாகி வருகின்றன. தற்கொலை, கொலை, அடிதடி என உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் ஒரு பெண்ணின் கள்ளக்காதலால் அவரது மகளும், கணவரும் பரிதாபமாக தங்களது உயிரை மாய்த்த சம்பவம் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், நாகமங்களா அருகே நடந்துள்ளது.
அங்குள்ள தேவலாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி பெயர் நாகம்மா. இவர்களுக்கு அஸ்வினி என்ற மகள் இருந்தார். நாகம்மாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் இடையே கள்ள உறவு இருந்தது. இது தெரிய வந்து அதிர்ந்த ஜெகதீஷ் ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிட்டார். பஞ்சாயத்தாரும் விசாரித்து அபராதம் விதித்தனர்.
ஆனாலும் அபராதத்தைக் கட்டி விட்டு தங்களது கள்ள உறவை தொடர்ந்து வந்தனர் குமாரும், நாகம்மாவும். இதனால் மனம் உடைந்து போன அஸ்வினி 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவியின் நடத்தையாலும், மகளின் மரணத்தாலும் நிலை குலைந்து போன ஜெகதீஷ், மனைவியைக் கண்டித்தார். ஆனாலும் அவர் திருந்தியபாடில்லை.
இந்த நிலையில் ஜெகதீஷ் வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது வீட்டில் மனைவியும், குமாரும் உல்லாசமாக இருந்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போய் விட்டார். இவ்வளவு சொல்லியும் திருந்தவில்லையே மனைவி என்று நொந்து போன அவர் வீட்டுக்குள் நுழையாமல் வெளியேறினார். அருகே உள்ள மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து விட்டார்.
போலீஸார் குமார் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகி விட்ட அவரைத் தேடி வருகின்றனர். ஒரு பெண்ணின் கள்ளக்காதலால் இரண்டு தற்கொலைகள் நடந்திருப்பது அந்தக் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக