புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மரக்கட்டை, கரி ஆகியவற்றை எரிபொருளாக பயன்படுத்தப்படும் அடுப்புகளில் இருந்து வெளியேரும் புகையினால் ஏற்படும் நுரையீரல் நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் மூன்றாம் உலக நாடுகளில் 20 இலட்சம் பேர் பலியாகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் தேச உடல் நலக் கழகம் ஏற்பாடு செய்த இந்த ஆய்வு, உலகில் பாதிக்குப் பாதி - அதாவது 300 கோடி மக்கள் - இப்படிப்பட்ட புகையை கிளப்பும் அடுப்புக்களைக் கொண்டுதான் சமையல் செய்கின்றனர் என்றும், அதில் இருந்து வெளியேறும் புகைமண்டலம், சமையல் செய்யும் பெண்களையும், அவர்களோடு வளரும் குழந்தைகளையும் பாதிக்கிறது என்று அறிக்கை அளித்துள்ளது.

இந்த ஆய்விற்குத் தலைமையேற்ற மருத்துவரும் தேச உடல் நலக் கழகத்தின் தலைவருமான பிரான்சிஸ் காலின்ஸ், “வீட்டுக்குள்ளேயே கட்டை, கறி வைத்து எரிக்கும் அடுப்புகளால் பல உடல் நலக் கேடுகள் ஏற்படுகின்றன என்பதை மக்கள் புரிந்துக்கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.

மரக்கட்டை, கரி, வைக்கோல் போன்ற அதிக புகை எழுப்பும் எரிபொருட்களை பயன்படுத்துவதால் விடு முழுவதும் பரவும் புகைமண்டலத்தால் வீட்டின் உட்பகுதி மட்டுமின்றி, உடலின் உள் பாகங்களும் பாதிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

புகையிலையால் ஏற்படும் பாதிப்புக்களைப் போன்று, இப்படிப்பட்ட புகை, கரியினால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சுவாசப் பை கோளாறுகள் ஏற்படுகின்றன என்றும், இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது பெண்களும், குழுந்தைகளும்தான் என்றும் கூறியுள்ளனர்.

இப்படி ஒவ்வொரு ஆண்டும் 20 இலட்சம் பேர் மூன்றாம் உலக நாடுகளில் பலியாவைத் தடுக்க, தூய்மையான அடுப்புகளுக்கான உலக கூட்டணி என்கிற விரிவானத் திட்டத்தை ஐ.நா.வகுத்துள்ளது. இதன்படி வரும் 2020ஆம் ஆண்டிற்குள் 10 கோடி வீடுகளில் எரிவாயு அடுப்பு அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக அமெரிக்க அரசு 5 கோடி டாலர்களும், மேலும் ஆய்வு நடத்த 2.5 கோடி டாலர்களும் நிதியுதவி செய்துள்ளதாம்.

புகையடுப்பு பாதிப்பு என்பது குழந்தை பிறப்பிலும் பிரதிபலிக்கிறது என்று கூறுகின்றனர். பிறக்கும் குழந்தைகள் எடைக் குறைவு, பார்வையிழப்பு, இதய பலவீனம், ஆஸ்த்துமா, காசநோய் ஆகியனவும் ஏற்படுகின்றன என்று அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top