புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


 ரயிலில் சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனிடம், நீங்கதான் பிரதமரா? என்று இந்திய இளம்பெண் கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையை சேர்ந்த இளம் பெண் சன்யோஜிதா மெயர். பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் லண்டன் சென்றார். கணவர் யான்கோ, 3 மாத பெண் குழந்தை சயாமாவுடன் ஷாப்பிங்
சென்றார். சுரங்க பாதையில் செல்லும் டியூப் ரயிலில் சன்யோஜிதா சென்றார்.

வெஸ்ட்மினிஸ்டர் ரயில் நிலையத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ரயிலில் ஏறினார். காரில் செல்வதை விட ரயிலில் செல்வதால் நேரம் மிச்சம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரயில் பயணிகளை உற்சாகப்படுத்தவும் கேமரூன் ரயிலில் பயணம் செய்தார்.பயணிகளிடம் பேசி வரும் போது சம்யோஜிதாவை பார்த்து, இது உங்கள் குழந்தையா, அழகாக இருக்கிறாள் என்று கேமரூன் கூறினார். அதற்கு நன்றி தெரிவித்த சம்யோஜிதா, இவர் யார்? என்று கணவனிடம் கேட்டார். அதற்கு, அவர்தான் இங்கிலாந்து பிரதமர் என்று கூறினார். அதை நம்பாத சம்யோஜிதா, நேராக கேமரூனிடம் சென்று, நீங்கதான் பிரதமரா? என்று கேட்டார். அதற்கு, ‘ஆமாம்’ என்று அவரும் பதில் அளித்தார். அப்போதும் நம்பாமல் சம்யோஜிதா வாய்விட்டு சிரித்தார். இதனால் ரயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு மாதிரி என்னை பார்த்தனர். அதன்பின் அவர்தான் பிரதமர் என்று அறிந்து மன்னிப்பு கேட்டேன். அவர் சிரித்து கொண்டே சென்று விட்டார். நம் ஊரில் பிரதமர் உள்பட பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ரயிலில் செல்வதில்லை என்று பிரதமரிடம் கூறினேன் என்று சம்யோஜிதா ஆச்சரியமாக கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top