
30ந் தேதி அமெரிக்காவின் மிசூரியில் பிறந்த இவர், பின் நாட்களில், ஒரு பன்முகத் தன்மை மிக்க எழுத்தாளர் எனக் கொண்டாடப்பட்டார். ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள், டாம் சோயரின் சாகசங்கள் ஆகிய படைப்புக்களில், இவரது எழுத்து நயம், சொல் நயம் என்பவற்றுக்காகப் பாராட்டப்பட்டார்.
இவரது படைப்புக்களில் இயல்பாக இயைந்து வரும், நகைச்சுவை, சொல்லாட்சி, அவரது படைப்புக்களுக்கான பாராட்டுக்களையும், ரசிகர்களையும் பெற்றுக்கொடுத்தது. மிகப் பிரபலமான அரசியற் தலைவர்கள் முதல், பல்வேறு மக்களும் இவரது ரசிகர்களாக அமைந்திருந்தமை அவரது எழுத்தாற்றலின் வெற்றி. இதனாலேயே புகழ்பெற்ற மற்றுமொரு அமெரிக்க எழுத்தாளரான வில்லியம் போல்க்னரால் அமெரிக்க இலக்கியத்தின் தந்தை எனப் பாராட்டப்பட்டார்.
விரிவுரையாளலாகவும் கடமையாற்றிய மார்க் டுவைன் 1910 ஏப்ரல் 21ந்திகதி தனது 74 வயதில் மறைந்தார். அவரது எழுத்துக்களின் ஆற்றலினால் இன்னமும் வாழ்க்கின்றார் எனப் புகழப்படுகின்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக